சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள வேந்தன் மீது காடு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இப்படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி(நாளை) வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இத்தரைபடத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் இயக்க முன் பணம் ரூபாய் 2.40 கோடி பெற்ற அதே கதையைத்தான் வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் கௌதம் மேனன் இயக்கியிருப்பதாகவும் இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க கூறி ஆன்இன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனிடையே இவ்வழக்கில் தற்போது தான் முன்பணமாக பெற்ற 2.40 கோடியை அடுத்த திரைப்படம் இயக்குவதற்கு முன்பு வழங்குவதாக கௌதம் மேனன் தரப்பு உத்தரவாதம் அளித்ததால் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.