வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இத்திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை பார்க்கலாமா..!
கிராமத்தில் அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகின்றார் சிம்பு. வேலை செய்யும் பொழுது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகின்றது. இதனால் சிம்புவை நினைத்து தாய் ராதிகா பயப்பட்டு உறவினர் மூலம் வேறு வேலைக்கு அனுப்ப முயற்சிக்கின்றார். இந்த நிலையில் உறவினர் தற்கொலை செய்து கொள்ள சிம்பு அவர் வேலை செய்யும் இடமான மும்பைக்கு செல்கின்றார். அங்கு சிம்பு பரோட்டா கடையில் வேலை செய்கின்றார். அப்போது எதிர்பாரா விதமாக கேங்ஸ்டர் கும்பல் சேர்கின்றார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆகின்றது என்பதே இத்திரைப்படத்தின் கதையாகும்.
சிம்பு முதல் பாதியில் வெகுளியாகவும் இரண்டாம் பாதியில் மிடுக்கான நடிப்பையும் கொடுத்துள்ளார். காதல் காட்சியில் ரசிகர்களை உருக வைத்துள்ளார். நாயகி சித்தி இதானி முதிர்ச்சியான நடிப்பையும் ராதிகா அனுபவ நடிப்பையும் ஜாபரின் நடிப்பு தியேட்டரில் விசில் பறக்கவும் வைத்துள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் காதல், கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு இயக்கியுள்ளார். சிம்பு படத்தில் பல காட்சிகளை சிங்கிள் ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார். படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் வேற லெவலில் இருக்கின்றது. சித்தார்தாவின் ஒளிப்பதிவு அற்புதம். மொத்தத்தில் படம் வேற லெவல்.