கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகர் சித்தி இத்தானி, நடிகை ராதிகா போன்றோர் நடித்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
ஏ ஆர் ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் கவனத்தை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக மல்லிப்பூ பாடலும் அதன் காட்சி அமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த சூழலில் நடிகர் சிம்புவின் வெந்து தந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மல்லிப்பூ பாடல் வீடியோ இன்று வெளியாகும் என பட குழு அறிவித்திருக்கிறது. இதனால் ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர்.