சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளி அன்று தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து இவர் பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். தற்போது இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
Exciting News is Here ! #VendhuThanindhathuKaadu 2nd Schedule Wrapped & 3rd Schedule to begin soon in Mumbai.@SilambarasanTR_ has worked super duper hard in stunt sequences & it's gonna be a great treat to watch@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @Ashkum19 #VTK pic.twitter.com/gkWpXD67Bd
— Vels Film International (@VelsFilmIntl) September 20, 2021
மேலும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் . இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் தொடங்கப்பட உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சிம்பு இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் மிக கடுமையாக உழைத்துள்ளார் என்று படக்குழுவினர் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.