தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அசாத்திய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர் சிம்பு. அதனை தொடர்ந்து அவரது தந்தை டி ராஜேந்திர இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மன்மதன், வல்லவன் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமா திரையரங்கில் தனக்கென தனி பாணியை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதனை அடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.
வேல்ஸ் ஃபிலிம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் இந்த பாடத்தின் டீசர் இரண்டும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கின்றது. இந்த சூழலில் அடுத்த மாதம் வெளியாக இருக்கின்ற இந்த படத்திற்கு மிக விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெறப் போவதாக பேசப்பட்டு வருகிறது. அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்றது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் வருகை தர இருப்பதாக தெரிகின்றது. அவ்வாறு சிம்புவின் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் மற்றும் ரஜினி வருகின்ற பட்சத்தில் இந்த விழா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இருந்தபோதிலும் இதுவரை வென்று தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.