மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதமினன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின் சிம்பு கௌதம் மேனன் மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்திருப்பதால் இப்போதே ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகின்றார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிம்பு கௌதமேனன் கூட்டணிக்கு இசையமைக்கின்றார் ஏ ஆர் ரகுமான். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் முத்து என்கிற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகின்றார்.
இதன் படப்பிடிப்பு முன்பு திருச்செந்தூரில் ஆரம்பமானது. இந்த படத்திற்காக 20 கிலோ உடல் எடை குறைத்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் வெளியான இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெந்து தந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என கௌதமேனன் அறிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்திற்கு பார்ட் 1 kindling என டேக்லைன் கொடுத்திருக்கின்றார். அதாவது வத்திக்குச்சி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ட்ரெய்லர் கேஜிஎப் வானில் மரண மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றீர்கள். மேலும் வெந்து தணிந்தது காடு படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படத்தில் தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி இன் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.