Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு திருமணம்… அடுத்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும்… சொன்னது யார் தெரியுமா?…!!

நடிகர் சிம்புவின் திருமணம் பற்றி அவரது தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர்  உறுதியான தகவல் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலக பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படம் தயாராகி வருகிறது. அதோடு சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ திரைப்படத்திலும் சிம்பு  நடித்துள்ளார் .சமீபகாலமாக சிம்பு  சமூக வலைத்தளங்களில் தன் படங்கள் குறித்து அவ்வப்போது அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சிம்புவின் திருமணம் குறித்த தகவல் அறிய அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில்  சிம்புவின் தந்தையும் நடிகருமான டி. ராஜேந்தர்  சிம்புவின்  திருமணம் பற்றி உறுதியான தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர், அடுத்த ஆண்டு சிம்புவுக்கு நல்ல வரன் கிடைக்கும். ‘ஈஸ்வரன்’ பட தலைப்பிலேயே ‘வரன்’ உள்ளது என்று கூறியுள்ளார். இந்த செய்தியால் குஷியில் உள்ளனர் சிம்பு ரசிகர்கள்.

Categories

Tech |