சிம்புவைப் பற்றி நடிகர் பிரித்விராஜ் பப்லு கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்கள் ஏற்பட்ட நிலையில் மாநாடு திரைப்படம் இவருக்கு கை கொடுத்திருக்கின்றது. இந்நிலையில் இவர் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார்.
இந்நிலையில் பிரபல நடிகர் பிரித்விராஜ் பப்லு சிம்புவைப் பற்றி பேசும்போது கூறியுள்ளதாவது, “சிம்புவுக்கு இடையில் உடல் எடை அதிகரித்து பலரின் விமர்சனத்திற்கு உள்ளானார். இதைத்தொடர்ந்து மிகவும் கஷ்டப்பட்டு தன் உடல் எடையை குறைத்து பழையபடி தோற்றமளிக்கிறார். இதை பப்லு பாராட்டியுள்ளா.ர் சிம்பு உடல் எடையைக் குறைத்தது மிகவும் நல்ல விஷயம் இதை தொடர்ந்து பராமரிக்க கட்டுப்பாடாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் சிம்புவை எனக்கு குழந்தையில் இருந்தே தெரியும். நான் என்ன சொன்னாலும் சிம்பு கண்டிப்பாக கேட்பார். ஆனால் அவருக்கு வாய்தான் கொஞ்சம் அதிகம்” எனக் கூறியிருக்கின்றார்.