Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவுக்கு எதிராக சதி… டி.ஆர்.ராஜேந்தர் அதிரடி குற்றச்சாட்டு…!!!

நடிகர் சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு வருகின்ற 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிம்புவிற்கும் தனக்கும் எதிராக தயாரிப்பாளர்கள் சதி செய்வதாக டி.ஆர்.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு முன்பே ஈஸ்வரன் வெளியாகக் கூடாது என்று சதி செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் பிரச்சனை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |