வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட்டிங் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இத்திரைப்படத்திற்காக கண்டிப்பாக சிம்புவிற்கு தேசிய விருது கிடைக்கும். படம் தமிழ்நாட்டை தாண்டி பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவை செய்து இருக்கின்றது. படம் ஹிட் இல்ல பம்பர் ஹிட். இத்திரைப்படத்தை எடுத்ததில் எங்கள் நிறுவனம் பெருமை கொள்கின்றது.
நடிகர் சிம்பு இப்படத்தில் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கின்றார். இத்திரைப்படத்திற்காக அவர் தேசிய விருது வாங்குவார். அதற்கு வேறு நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்த திரைப்படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்திருக்கின்றார். சிம்பு அதற்கு தகுதியானவர். குழந்தையிலிருந்து நடித்துக் கொண்டு வருகின்றார் என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது