சிம்புவின் இடத்தை நடிகர் விஷால் பிடித்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் தற்போது தனது கடின உழைப்பால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி வருகின்றார். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக அவர் தன்னுடைய எடையை வெகுவாக குறைத்தார். மேலும் திரைப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் பலரின் பாராட்டையும் பெற்றார். இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பல புகார்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என்பது போல சர்ச்சைகள் இருந்த நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு விட்டார்.
இந்த நிலையில் சிம்புவின் இடத்தை நடிகர் விஷால் பிடித்துள்ளார். நடிகர் தயாரிப்பாளர் என பிசியாக இருக்கும் விஷாலின் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கின்றாராம். பொறுத்து பார்த்த தயாரிப்பாளர்கள் தற்பொழுது விஷால் மீது தயாரிப்பாளர் சங்கத்தின் புகார் கொடுக்க தயாராகி வருகின்றார்களாம். விஷாலுக்கும் லைகா ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு ஏற்கனவே பிரச்சனைகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று அந்த பிரச்சினைக்கு இன்னும் முடிவு கிடைக்காமல் இருக்கின்ற நிலையில் தற்பொழுது மேலும் பிரச்சினைகள் வந்த வண்ணம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.