தமிழகத்தில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தை ரசிகர்கள் பாருங்கள் என்று சிம்பு கூறியதை பலரும் டுவிட்டரில் கலாய்த்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்,உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்தை என் ரசிகர்கள் பாருங்கள், ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்கள் பாருங்கள் என்று சிம்பு கூறியதை மேற்கோள் காட்டி, “இருவரின் ரசிகர்களையும் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பார்ப்பார்கள்” என்று ட்விட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.