வெந்தது தணிந்தது காடு திரைப்படத்திற்காக சிம்பு செய்த காரியம் குறித்து கௌதம் மேனன் பேசியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் சிம்பு வெந்தது தணிந்தது காடு திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இத்திரை படத்திற்காக சிம்பு செய்த அர்ப்பணிப்பு குறித்து அண்மையில் கௌதம் மேனன் பேசியிருக்கின்றார். அவர் பேசியதாவது, சிம்பு இத்திரைப்படத்திற்காக மேலும் தனது உடல் எடையை குறைத்து 21 வயது தக்க இளைஞராக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் எந்த ஒரு பெரிய நடிகரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஆனால் சிம்பு இப்படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். கௌதம் மேனன் தற்போது கூறியுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்திருக்கின்றது.