தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிம்பு தவறவிட்ட படங்கள் தற்போது மெஹா ஹிட்டாக மாறியுள்ளது. ஆனால் ஒருவேளை சிம்பு அந்த படங்களில் நடித்திருந்தால் தற்போது பல வெற்றிகளுக்கு சொந்தக்காரராக மாறி இருப்பார்.
நடிகர் சிம்பு தவறவிட்ட அந்த படங்கள் பற்றிய தொகுப்பு இதோ :-
திமிரு :-
தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டில் வெளியான “திமிரு” மெகாஹிட் படத்தில் சிம்புவை தான் ஹீரோவாக நடிக்க முதலில் கேட்டுள்ளனர். ஆனால் அப்போதைய சூழ்நிலை சிம்பு நடிக்க முடியாமல் போனதால் அந்த படத்தில் விஷால் நடித்திருக்கிறார்.
கோ :-
ஜீவா நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியான “கோ” திரைப்படம் அதிக வசூலை ஈட்டியதோடு மெகாஹிட்டாக மாறியது. அந்த படத்தில் சிம்பு தான் முதலில் நடிப்பதாக இருந்தது. பின்னர் ஏதோ சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போகவே ஜீவா அந்த படத்தில் நடித்துள்ளார்.
நண்பன் :-
விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியான “நண்பன்” திரைப்படம் ஹிட்டாக மாறியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ஷங்கர் முதலில் சிம்புவை தான் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் சிம்பு சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
வேட்டை :-
மாதவன், ஆர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் வெளியான “வேட்டை” மெகா ஹிட் திரைப்படம் பற்றிய முழு கதையை இயக்குனர் முதலில் சிம்புவிடம் தான் கூறியிருக்கிறார். ஆனால் சிம்பு அப்போது கால்ஷீட் பிரச்சனைகளால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.
வட சென்னை :-
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “வடசென்னை” திரைப்படத்தில் சிம்பு தான் தனுஷிற்கு பதிலாக நடிக்க இருந்தார். இருப்பினும் சிம்பு சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது ஆகும்.