Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா”…. முதலில் இவர்தான் நடிக்கயிருந்தாராம்….!!!!

சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் நடிக்க இருந்தாராம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிம்பு. சிம்பு முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். இவர் இடையில் சில சறுக்கல்கள் சந்தித்து படத்தில் நடிக்காமல் இருந்து பிறகு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் 2010ஆம் வருடம் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெஹா ஹிட் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் தான் நடிக்க இருந்ததாக நடிகர் ஜெய் கூறியுள்ளார். இவர் நடித்த சுப்பிரமணியம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து அத்திரைப்படத்தில் சிம்பு நடித்தார். இந்நிலையில் ஒரு சிறந்த திரைப்படத்தை தான் மிஸ் செய்துவிட்டதாக கூறி வருத்தப்பட்டுள்ளார் நடிகர் ஜெய்.

Categories

Tech |