சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வந்தார் .
ஈஸ்வரன் வந்துட்டான். ஆல் ஏரியாலையும் அடிச்சு ஆடும் சிலம்பரசன் ஆட்டத்தை பாரு!
June 12 முதல் Disney+ Hotstar VIP-யில்@MusicThaman @Nanditasweta @AgerwalNidhhi @SilambarasanTR_ pic.twitter.com/4fvUJ3L0Xu— Disney+ Hotstar VIP (@DisneyplusHSVIP) June 10, 2021
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூன் 12-ஆம் தேதி முதல் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .