சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி மூலம் நடிகை ஸ்ரீநிதி அறிமுகமானார். இவர் யாரடி நீ மோகினி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் வலிமை படம் பற்றி பகிர்ந்த வீடியோவானது கடும் சர்ச்சைக்கு உள்ளானது. இவரின் வீடியோவை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகவும் கொந்தளித்தார்கள்.
மேலும் சமூக வளைதளத்தில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக ஸ்ரீநிதி சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி அவரின் வீட்டின் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரின் அம்மா ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதால் இப்படி எல்லாம் செய்கின்றார். அதனால் அவரை யாரும் திட்ட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஸ்ரீநிதி, சின்னத்திரை நடிகை நட்சத்திராவின் திருமணம் பற்றி வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்திருக்கும் சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை பெற்று வருவதாக அவரின் நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.