மாநாடு படத்தில் நடிக்கும் சிம்புவின் மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போனதாக பிரபல நடிகர் கூறிருக்கிறார்.
தற்போது நடிகர் சிம்பு அவர்கள் மாநாடு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படமானது ஊரடங்குக்கு முன்பாகவே ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக இந்த படப்பிடிப்பின் வேலைகள் நின்றுபோனது. எனவே நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் எடுக்கப்பட்ட ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மாநாடு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் இதில் கலந்து கொள்ள நடிகர் சிம்பு பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் மாநாடு படத்தில் நடிகர் படவா கோபி இணைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது இவர் ஏற்கனவே வெங்கட்பிரபுவின் சென்னை 28 படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் படவா கோபி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; எங்கள் தம்பி சிலம்பரசனின் இந்த மாற்றத்தை கண்டு நான் திகைத்துப் போனேன். இதனால் மகிழ்ச்சி அடைந்தேன். இது மிகவும் உத்வேகமாக இருக்கின்றது. இதை தொடர்ந்து அவர் பலருக்கு ஊக்கமளிக்கட்டும் எனக் கூறியிருக்கிறார்.