சிம்பு வெளியிட்ட மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகின்றது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற மல்லிப்பூ பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதனை ரசிகர்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றார்கள்.
Making of #Mallipoo ❤️#behindthescenes #VendhuThanindhathuKaadu @arrahman @BrindhaGopal1 @menongautham @IshariKGanesh @VelsFilmIntl @thinkmusicindia @thamarai_writes pic.twitter.com/UV59nyaP3j
— Silambarasan TR (@SilambarasanTR_) October 5, 2022