சிம்மம் ராசிக்கான சித்திரை மாச பலன்கள்..! மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த உங்களுக்கு 2010ஆம் ஆண்டு சார்வரி வருடம் தமிழ் மாதம் ராசி பலன்கள் என்ற அடிப்படையில் சித்திரை மாத ராசிக்கு உண்டான பலன்களை நாம் இப்பொழுது பார்க்கலாம். சித்திரை மாதத்தில் சிம்ம ராசிக்கு வரக்கூடிய சுப அசுப பலன்கள், சந்திராஷ்டம தினங்கள், வணங்க வேண்டிய தெய்வங்கள், வழிபடவேண்டிய தெய்வங்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட திசைகள் இதையெல்லாம் பற்றி பார்ப்பதற்கு முன்னாடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வம் அதிதேவதையாக விளங்குவார்.
அப்படிப் பார்க்கும் பொழுது சிம்ம ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடிய தெய்வம் என்றும் நமக்கு அனுக்கிரகம். நம் கூடவே இருக்கும் தெய்வம் என்றால் சூரிய பகவானும், சூரியனுக்கு அதிதேவதையாக விளங்கும் கூடிய சிவபெருமானும். அப்பேர்பட்ட அவர்களை துதிசெய்து நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் மிகவும் சிறப்பாக மாதம் இருக்கும். சூரியனையும் சிவபெருமானையும் எப்பொழுதும் வழிபட்டு கொண்டிருந்தால் வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மை பெறலாம்.
ராசிக்கு பதினோராம் இடம் என்று சொல்லக்கூடிய லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார்; அதனால் மிக சிறப்பான யோகங்கள் எதிர்பாராத நன்மைகள் இவையெல்லாம் ஏற்படும். தனவரவு திருப்திகரமாகவே இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சரிவு விலகி உயர்வு ஏற்படும். வேலை செய்யும் ஊழியர்கள் எல்லாம் சாதகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும். வெளிநாட்டு தொடர்பு அந்நிய செலவாணி அந்நிய முதலீடு, ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் செய்பவர்களுக்கு மிகச் சிறப்பான யோகங்கள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சிம்ம ராசி நேயர்கள் வெளிநாடு போக கூடிய வாய்ப்புகள் தெரியும்.
எந்த ஒரு வேலையாக இருந்தாலும் கல்விக்கும் மருத்துவத்திற்கும், வியாபாரத்திற்கு தொழிலுக்கு உத்தியோகத்திற்கு சுத்தி பார்ப்பதற்கு எப்படி வேண்டுமென்றாலும் இந்த மாதத்தை அடுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். இந்த மாதத்தில் பார்த்தோமென்றால் இந்த நாட்டை விட்டு, வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருக்கிறது. ஆனால் ராசியில் அனுபவங்கள் உண்டு. அவை விலகி சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் படலாம்.
ராசிக்கு 10-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய இதில் தொழில் ஸ்தானம் கர்ம ஸ்தானம் என்ற இடத்தில் சுக்கிரன்; அதனால் தொழில் முன்னேற்றம், சுய தொழிலில் லாபம், பழைய கடன்கள் எல்லாம் நிவர்த்தி, கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்வதற்கு லோன் அப்ளை செய்து இருப்பவர்களுக்கு லோன் கிடைக்கும். சுக்கிரன்தான் செல்வத்திற்கு அதிபதி செல்வம், செல்வாக்கு, பொருளாதாரத்தில் வளர்ச்சி, பெயர், புகழ், அந்தஸ்து செய்தொழிலில் மரியாதை தனக்கென்று ஒரு புகழ் ஒரே தொழிலை 10 பேர் செய்திருந்தால் நமக்கு ஒரு பெயர் இருக்கும். 1008 நகைக் கடைகள் இருந்தாலும் சில நகைக் கடைகளில் தான் நாம் எடுப்போம் அக்கூட்டம் அங்குதான் குவியும். ஒன்னு வித்தியாசம் கிடையாது. புகழ் கிடைக்கும் என்பது காலகட்டங்கள் வரும் பொழுது கிடைக்கும். தொழில் செய்தால் முன்னேற்றம் பெயர் புகழ் வருமானம் ஆகியவை கிடைக்கும் சிறப்பாக அமையும் இது விளங்குகிறது.
ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய பாக்கிய ஸ்தானத்தில் சூரியன்; அரசு ராசியாதிபதி மேஷத்தில் உச்சம் அப்பொழுது அரசுத்துறை அரசியல்வாதிகள் அரசுத் துறை சார்ந்த பணியாளர்கள் காண்ட்ராக்ட் பேசிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள் எல்லோருக்குமே சிறப்பான நன்மைகள் ஏற்படும். பணி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்தபடி பாராட்டுகள் எதிர்பார்த்த சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி இடமாற்றங்கள் பெயர்ப்புகள் இவை எல்லாம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சிறப்பான அனுகூலங்கள் உண்டு. தகப்பனார் வழி சொத்துக்கள் தகப்பனார் மூலமான நன்மைகள் தகப்பனாருக்கு இருக்கும் நோய் நிவாரணம் இவையெல்லாமே நடக்கும்.
எட்டாமிடத்தில் புதன் சஞ்சரிக்கிறார் குரு உடைய வீட்டில்; தனியாக வேலை செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். செய்யும் தொழில் வேலைகளில் அதிக கவனத்தோடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். கல்வி பயிலக் கூடிய மாணவர்களும் கொஞ்சம் சிறப்பாக தனிமையா முழு முயற்சியோடு கவனத்தோடு கடினப்பட்டு படிக்கக்கூடிய ஒரு காலகட்டம். ஆறாம் இடம் என்ற இடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை சத்துரு ஸ்தானம் என்று சொல்வார்கள். செவ்வாய் இங்கே இருக்கும் பொழுது உடல்நல கோளாறுகள் சில பேருக்கு விபத்துகள், விரயங்கள் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். குருவும் அறுவை மருத்துவர் சிறு சிறு பிரச்சனைகள் இவையெல்லாம் வந்து மறையக் கூடிய ஒரு காலகட்டமாக இருக்கும். 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி கேது சேர்க்கை மிக சிறப்பான யோகம் வண்டி வாகனங்கள் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழலாம்.
ஆடை ஆபரணங்கள் இதையெல்லாம் வாங்கி சந்தோசமாக இருக்கக்கூடிய அமைப்புகள் குடும்ப உறுப்பினர்களோடு சந்தோஷமாக இருக்க கூடிய அமைப்புகள் இவை எல்லாமே ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த மாதத்தில் இருக்கும். பொதுவாக சிம்ம ராசி இந்த மாதத்தை பொருத்தவரை 80% நன்மைகள் இருக்கக்கூடிய மாதமாக விளங்குகிறது. கல்வி பயிலக் கூடிய மாணவர்களுக்கு 60 சதவீத நன்மைகள், கலைத்துறை அரசியல்வாதிகளுக்கு பெண்களுக்கு 70 சதவிகித நன்மைகள், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்கள் 90% நன்மைகள் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. சிம்ம ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்கவேண்டிய சந்திராஷ்டமம் என்று பார்த்தால் சித்திரை மாதம் ஆறாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி 36 நிமிடம் முதல் சித்திரை மாதம் 9ஆம் நாள் புதன்கிழமை பகல் 2 மணி 11 நிமிடம் வரை சஞ்சரிக்கிறது. அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்க்க இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான வண்ணம்: சிகப்பு வெள்ளை
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 19
வணங்க வேண்டிய தெய்வம்: சிவபெருமான்
ஏனெனில் சிவபெருமானை வழிபட்டு இந்த மாதத்தை ஒரு இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்.