சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று முக்கியமான விஷயங்களை நீங்கள் யாரிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டாம். அதேபோல முக்கியமான செயலை பிறரிடமும் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். திடீரென்று நிர்வாக செலவு கொஞ்சம் கூடும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். வாகனத்தில் போகும் போது ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். இன்று காரணமே இல்லாமல் வீண் பழி கூட சுமக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவை கொஞ்சம் ஏற்படுத்தும்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடும். கூடுமானவரை கொஞ்சம் அமைதியாக இருங்கள். தூக்கமின்மை உடல் நிலையில் சோர்வு ஞாபகமறதி, மந்தமான நிலைகள் போன்றவை கூட ஏற்படும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. மாணவர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் கல்வியில் ஈடுபடுவது நல்லது. திறம்பட படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.
அதேபோல தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாகவே படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்