சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாகனப் போக்குவரத்தை பின்பற்றுங்கள், பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் கொஞ்சம் கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனப்பூர்வமாக கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கொஞ்சம் நிம்மதி குறையும். படியான சூழல் இருக்கும் யாரிடமும் கோபம் இல்லாமல் பேசுங்கள் ரொம்ப நல்லது.
கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள் சில முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கக்கூடும். அதுமட்டுமில்லை இன்று வெளியூர் பயணத்தின் போது பொருட்களின் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகவே உள்ளது. மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு பாடங்களைப் படியுங்கள், மனதை நிதானமாக வைத்துக்கொள்ளுங்கள். தேர்வில் வெற்றி பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், அதுமட்டுமில்லை தேர்வு முடியும் வரை உணவில் கொஞ்சம் கட்டுப்பாடு உடன் இருங்கள் எளிதில் வெற்றி பெற முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் எடுப்பதற்கு அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்
அதிர்ஷ்ட திசை: தெற்கு