சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எவ்வளவுதான் நீங்கள் கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொஞ்சம் கிடைக்க சிரமம் இருக்கும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு கடுமையாக போராடுவீர்கள். பயணத்தில் தடைகளும், தாமதமும் கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் கொஞ்சம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவும் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம், முக்கியமான காரியங்களை நல்ல முடிவுடன் எடுக்க முடியும்.
இன்று எதை தொட்டாலும் ஓரளவு வெற்றி கிடைக்கும். இன்று கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். யாரிடமும் பணம் கடன் மட்டும் வாங்க வேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கான முன்னேற்றமான சூழல் இருக்கும். அது மட்டுமில்லை தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் உங்களுடைய மனநிலையை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இரண்டு நிமிடம் தியானம் மேற் கொள்ளுங்கள், அது போதும்.
அது போல தேர்வு முடியும் வரை காரமான உணவு வகைகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழங்கள், பால் போன்றவற்றை எடுத்துக் கொள்வது ரொம்ப நல்லது. நீங்கள் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று நல்ல சந்தோஷமான சூழ்நிலை அமையும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்