சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்திச் செல்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். முன்னேற்றமான பலன்கள் இன்று அமையும்.
புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவை பற்றிய செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். பணியில் நிம்மதியான நிலை ஏற்பட்டாலும் சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை அமையும். தொலைபேசி வழித் தகவல் ஓரளவே மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் அமைவதற்கு கொஞ்சம் சிக்கலான கால கட்டமாக இன்று அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்வது ரொம்ப நல்லது . சிவப்புநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கப் பெற்று சிறப்பினை பெறலாம்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்