சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எவ்வளவுதான் கஸ்டப்பட்டு நீங்கள் உழைத்தாலும் எதிர்பார்த்த பலன்களை பெறுவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளும், நண்பர்களின் சேர்க்கைகளும், வீண் பிரச்சனைகளை உருவாக்கிக் கொடுக்கும். அதனால் கொஞ்சம் கவனமாகவே இருங்கள், இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாகத்தான் இன்று இருக்கவேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஓரளவு காணப்படும்.
குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அளவிற்கு நடந்து கொள்ளவர்கள். மாணவச் செல்வங்கள் இன்று நிதானமாக பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடங்களை எப்பொழுதும் போலவே எழுதி பார்க்கவேண்டும். எழுதிப் பார்ப்பது மனதில் எளிதாக பதிவதற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம் .
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்