Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… நண்பர்களால் சில பிரச்சனை வரும்…செலவு அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களால் சில பிரச்சினைக்கு ஆளாக கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாகவே இருக்கும். பணவரவை விட நிர்வாகச் செலவு தான் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியைத் திறம்பட சமாளிக்க கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளையும் நீங்கள் சந்திக்க கூடும். மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும். பெரிய முதலீடுகள் செய்ய நினைக்கும் காரியங்களை மட்டும் தள்ளிவைப்பது ரொம்ப நல்லது.

புதிய முயற்சிகள் ஏதும் இப்போதைக்கு வேண்டாம். எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படும் அபிவிருத்தி இன்று குறையும். இன்று உடல் ஆரோக்கியமும் ஓரளவுதான் சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் மீது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை, சுமுகமாக எல்லா விஷயத்திலும் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு சகோதரர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக இன்று உங்களுக்கு கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது, நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |