சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று எதிலும் மதிநுட்பத்துடன் செயல் படுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வளரும். பணவரவு நன்மையை கொடுக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும். இன்றைய நாள் உங்களுக்கு ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாகவே நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். இழுபறியாக இருந்த காரியமும் நல்லபடியாகவே நடந்து முடியும். பிள்ளைகளுக்கு மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடக்கும்.
தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பண பாக்கி வந்து சேரும். அரசாங்கத்தாலும் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். மனமகிழ்ச்சி கொள்வீர்கள். காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். காதலர்களுக்கு இன்று பொன்னான நாளாகவே அமையும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இன்று இருக்கும். திருமண முயற்சிகள் பற்றிய பேச்சுவார்த்தை இன்று நடத்துங்கள்.
அனைத்து விஷயங்களும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். இந்த வருடம் முழுவதும் நீங்கள் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்