சிம்மம் ராசி அன்பர்களே..! கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும் தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள் ஆகவே இன்றைய நாள் இருக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது தான் ரொம்ப நல்லது.
பொருளாதாரம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் அனைத்துமே குறையும் சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை கொஞ்சம் உண்டாகலாம். இந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாகவே இருங்கள், உடல்நிலையிலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள், வாகனத்தை இயக்கும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவே இருக்கும். சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் நீலம் நிறம்