சிம்மம் ராசி அன்பர்களே, இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசனை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடிவரும்.
அமோகமாக இன்று இருக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உங்களுடைய செயல் திறன் இன்று கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும்.
கல்விக்காக அவர்கள் கடுமையாக உழைப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு மேற்கொள்ளுங்கள், இன்று சிவராத்திரி என்பதால் சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு ரொம்ப சிறப்பை கொடுக்கும்.
முடிந்தால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ளது தங்கள் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை