சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும் எனவே முன்னேற முயலுங்கள், வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். கூடுமானவரை நீங்கள் செய்ய வேண்டியதை இன்று வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாகவே செய்ய வேண்டும். யாருக்கு எந்த வித ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது, வாக்குறுதிகளும் கொடுக்கக்கூடாது.
வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே ஈடுபடுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும் வியாபாரத்திலிருந்த இழுபறியான நிலை நீங்கி ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலுவைத்தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க கூடிய வாய்ப்புகளும் இருக்கும்.
இன்று கூடுமானவரை கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் மட்டும் ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் எந்தவித பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டும். சக மாணவர்களிடம் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்