Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு… யோகங்கள் வந்து சேரும்.. யோசித்து செய்லபடுங்கள்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று யோகங்கள் வந்து சேரும். யோசித்து செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை  புரிவார்கள். இன்று வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். இன்று  உற்பத்தியிலும், விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் இந்தப் போட்டி , பொறாமைகளும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்று  புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். பழைய கடன் பிரச்னைகளில் இருந்தும் உங்களை காத்துக் கொள்வீர்கள். இன்றைய நாள் ஒரு மகிழ்ச்சியான நாடாகவே அமையும். மாணவர்களுக்கு இன்று ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். கல்வியில் நல்ல தரதேர்ச்சி பெறுவர் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தேர்வில் நல்ல வெற்றி வாய்ப்பையும் அவர்கள் பெறக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |