சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம் தேடி இணைய தகவல்கள் வரலாம். உத்தியோக உயர்வு உறுதியாகும். வரன்கள் வாயில் தேடி வரும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். இன்று எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெறுவீர்கள். புதிய கூட்டாளிகள் சேருவார்கள்.
வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இன்று ஏற்படும். தொழில் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களே அனுசரித்து செல்வது, வியாபார வெற்றிக்கு வழிவகுக்கும். இன்று மாணவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்வார்கள், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படுவார்கள். கல்வியில் நல்ல வெற்றியும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை-: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்