சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதங்கம் அடையக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண கூடும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். இன்று மதிப்புக் கூடும் நாளாக இருக்கும். மற்றவர்களின் நன்மைக்காக வாதாடி வெற்றி கொள்வீர்கள்.
இன்று கெளரவம் அந்தஸ்து உயரும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது வெற்றிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக தான் இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்