சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் பணிகளால் உங்களுக்கு டென்சன் ஏற்படும். அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள் இன்று தாமதமாகத்தான் நிறைவேறும்.
பல பிரச்சினைகளிலிருந்து எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் ஓரளவு ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்யோகம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடித்தால் நன்று. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். படித்தபின் தயவு செய்து எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்