Categories
தேசிய செய்திகள்

சியாச்சின் பனிமலைப் பகுதி: 38 வருஷத்துக்கு பின் ராணுவ வீரரின் உடல் மீட்பு…. வெளியான தகவல்…!!!!!

சியாச்சின் பனிமலைப் பகுதியில் காணாமல்போன இராணுவ வீரரின் சடலம் 38 வருடங்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தைச் சோ்ந்த சந்திர சேகா் ஹா்போலா கடந்த 1984ம் வருடம் இமயமலையில் உள்ள உலகின் உயரமான யுத்தகளமான சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சண்டையிட சென்றாா். அப்போது இவரையும் சோ்த்து மொத்தம் 20 வீரா்கள் கொண்ட குழு சண்டையிட சென்றது. இந்நிலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கி 20 பேரும் இறந்தனர். இவா்களில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

மீதம் உள்ள 5 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. அவற்றில் சந்திர சேகா் ஹா்போலாவின் சடலமும் ஒன்று. இந்த நிலையில் சியாச்சினிலுள்ள பழைய பதுங்குக்குழியிலிருந்து சந்திர சேகரின் சடலத்தை ராணுவத்தினா் மீட்டனா். இதையடுத்து அவரின் சடலம் உத்தரகண்ட் மாநிலம் ஹல்ட்வானியிலுள்ள அவரின் மனைவி சாந்தி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்திர சேகரின் இறுதிச்சடங்கு ராணுவ மரியாதையுடன் நடைபெற இருக்கிறது.

Categories

Tech |