கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது சியான் 60, பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில்
விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சியான் 60 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.