‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது சியான் 60, பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .
ANNOUNCEMENT #Chiyaan60FirstLook On 20.08.21 #Chiyaan60 #ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @Lalit_SevenScr @Music_Santhosh @actorsimha @kshreyaas @DineshSubbaray1@SimranbaggaOffc @vanibhojanoffl @sherif_choreo @vivekharshan #Sanath @proyuvraaj pic.twitter.com/zzjcUTQPnO
— Seven Screen Studio (@7screenstudio) August 15, 2021
கடந்த ஒரு மாதமாக இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில் ‘சியான் 60’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்டு 20-ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாக இருக்கிறது.