சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சியோமி டி.வி 70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி டி.விக்கு ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டிவி சீனாவில் வரும் செப்டம்பர் 3-ல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த டிவி விலை ரூ.38,000 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் , தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் வெளியாவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ரெட்மி டிவி 70-இன்ச் 4கே திரை, ஹெச்.டி.ஆர் வசதியும், சுவற்றில் மாட்டுவது மற்றும் டேபிள் மீது வைப்பது என இரண்டு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டுள்ளது. இந்த டிவி 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ரேம் சேமிப்புடன், குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டு இயங்குகிறது. மேலும் , இதில் வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது. இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத் மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளித்துள்ளது.