வேதாளம் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வேதாளம். சிவா இயக்கியிருந்த இந்த படத்தில் லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சுமார் ரூ.120 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இன்று நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது.
https://twitter.com/KeerthyOfficial/status/1429368742715162627
அதன்படி இந்த படத்திற்கு ‘போலா சங்கர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் போலா சங்கர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரஞ்சீவியின் கையில் கீர்த்தி சுரேஷ் ராக்கி கயிறு கட்டும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது . தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.