நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடிகர் சிரஞ்ஜீவிக்கு தங்கையாக நடிக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் 2015- ஆம் ஆண்டில் வெளிவந்த படம் வேதாளம் ஆகும். இந்தப் படமானது பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்பொழுது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை இயக்குனர் ரமேஷ் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் ஆவார். வேதாளம் படத்தில் அஜித் கதாபாத்திரம் அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் எது என்றால் அது லஷ்மி மேனன் கதாபாத்திரம் ஆகும். தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என எதிர்பார்க்கப்படது.
இந்தநிலையில் வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. தெலுங்கு ,தமிழ் என முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் -கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் விழ வைத்துள்ளது.