மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகிய திரைப்படம் “லூசிபர்” ஆகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்திற்கு “காட்பாதர்” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். அத்துடன் கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட்பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இவற்றில் பிரபலமான பாலிவுட் நடிகரான சல்மான்கான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குனர் பூரி ஜெகன்நாத், சத்யதேவ் போன்றோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இத்திரைபடத்தில் சிரஞ்சீவியும், சல்மான்கானும் இணைந்து நடனம் ஆடும் நடனத்தை பிரபு தேவா வடிவமைக்கிறார். இதற்குரிய பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது “பிரபுதேவாவின் நடன வடி வமைப்பில் மெகாஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான்கானும் இணைந்து நடனமாட இருக்கின்றனர். திரையில் காணும் போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் இயக்குனர் மோகன்ராஜா, பிரபு தேவா, சிரஞ்சீவியுடன் தமன் உள்ள புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.