Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி படத்தில் பாடல் பாடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்?… வெளியான மாஸ் தகவல்…!!!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் காட்பாதர் படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் தெலுங்கில் ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் சல்மான் கான் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Chiranjeevi: వామ్మో.. చిరు కోసం ఏకంగా హాలీవుడ్‌ సింగర్‌నే దింపుతున్నారుగా..  బ్రిట్నీ స్పియర్‌ తెలుగులో పాట పాడుతుందా.? | According to the latest news,  it seems that ...

ராம்சரண் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காட்பாதர் படத்தில் உலக அளவில் பிரபல பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பாடல் பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |