வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் காமராஜர் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு மாதம் சரியாக குடிநீர் வினியோகம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீர் வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அயோத்தியாபட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.