சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொழு மாடுகளுக்கு முன்பாக கட்டு மாடுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் பார்வையாளர்களான பெரியாமைச்ஜன் பட்டியை சேர்ந்த போஸ் மற்றும் கள்ளி பட்டியை சேர்ந்த பெரியகருப்பன் ஆகிய இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர். இதேபோல காளையார்கோவில் சேர்ந்த கண்ணதாசன், குப்பன் ஆகிய இருவர் மஞ்சுவிரட்டு பார்த்துவிட்டு திரும்பும் போது சாலை விபத்தில் பலியாகினர். இதனால் ஒரே நாளில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.