திடீரென மனைவி இறந்ததால் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் இருந்த கணவருக்கு அடையாளம் தெரியாத சிலர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் டெக்சாஸ் சேர்ந்தவர்கள் Frank மற்றும் Lyn தம்பதியினர் கடந்த மாதம் 14ஆம் தேதி தூங்கி எழுந்த பின்னர் தனது கணவருடன் lyn மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு அளவுக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் frank அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனைக்கு லைன்ஐ கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் சோகத்தில் ஆழ்ந்த பிராங்க்டம் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஆன்லைன் மூலமாக தனக்குத் தேவையான பணத்தை திரட்டுவதற்கு முடிவு செய்தார். புரிந்து கொண்ட சிலர் தங்களது பெயரை கூட வெளிப்படுத்தாமல் 5 ஆயிரம் டாலர் பணத்தை உடனடியாக கொடுத்து உதவினார். இதனைத் தொடர்ந்து தனது மனைவிக்கு இறுதி சடங்கை சிறந்த முறையில் செய்தார்.
இது குறித்து கூறுகையில் மனைவியை இழந்து மிகவும் கடினமான சூழலில் இருந்த எனக்கு தேவதைகள் வந்து உதவியது போல் சிலர் உதவி செய்தார்கள்.நான் எதிர்பாராத வகையில் எனக்கு தேவையான பணம் உடனடியாக கிடைக்க பெற்றது. இதன் அடிப்படையில் உலகில் நம்மை சுற்றி இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். அதாவது தக்க சமயத்தில் உதவி புரியும் தேவதூதர்கள் இன்னும் இருக்கிறார்கள் எனக்கு உதவி புரிந்த அவர்களுக்கு எனது நன்றிகள் என கூறியுள்ளார்.