மாணவர்கள் அனைவரும் தேர்வை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.இதனையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் வகுப்புகள் நடத்தப்படாமல் குறுகியகால வகுப்புகளை கொண்டு மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மனதில் தேர்வு குறித்த அச்சம் உண்டாகியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பரீட்சை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற பரிட்சை எழுத வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் சரியான கால நேரத்தில் வகைப்படுத்தி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும். தைரியமாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.