Categories
சினிமா தமிழ் சினிமா

சிரிப்பு சத்தம் கேட்குது….. இரவில் நடிகைக்கு நேர்ந்த ஷாக் சம்பவம்…. அட அப்படியா…????

பிக் பாஸ் ஆறாவது சீசன் நேற்று முன்தினம் முத்க் தொடங்கி ஆரம்பமே கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கின் படி நிவா ,குயின்சி, ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய நான்கு பேரும் வீட்டிற்கு வெளியே தூங்கினார்கள். இரவு முழுவதும் தூங்காமல் கொசுக்கடியால் அவர்கள் எப்போது விடியும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதே சமயம் வீட்டில் இருந்த போட்டியாளர்களும் நன்றாகவே தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரட்சிதா மட்டும் சீக்கிரமாகவே எழுந்து விட்டார். வெளியே வந்த ரட்சிதாவிடம் எதற்கு சீக்கிரமாக எழுந்து விட்டீர்கள் என்று அவர்கள் கேட்க, என்னால் தூங்க முடியவில்லை.

திடீர்னு ஏதோ சத்தம் கேட்கிறது ஜிபி முத்து அண்ணா சிரிப்பது போல சத்தம் கேட்டது. எழுந்து பார்த்த போது அவர் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் அதேபோல மற்றவர்களுடைய சத்தம் கேட்டது மீண்டும் பார்த்த போது அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால் என்னால் தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அமானுஷ்யம் இருக்கிறது என்று செய்தி வெளியாகிய வரும் நிலையில் ரச்சிதா இப்படி கூறி உள்ளது போட்டியாளர்கள் அனைவரும் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |