பெண் இயக்குனரான ஜேன் கேம்பியனுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டடுள்ளார்.
ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று.
தற்போது 94-வது ஆஸ்கர் விழாவானது நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த பெண் இயக்குனரான ஜேன் கேம்பியனுக்கு ‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கிர்ஸ்டன் டன்ஸ்ட், ஜெஸ்ஸி ப்ளமோன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப்படம் ஆஸ்கருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கோல்டன், குளோப் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.