தமிழகத்தில் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படும் சிறந்த 3 காவல்நிலையங்களில் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 3 காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து தமிழக அரசு சார்பில் பாராட்டு கேடையம் வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டிற்க்கான சிறந்த காவல் நிலையாமாக தேனி மாவட்டம் போடி நகர் காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் அனைத்து பணிகளிலும் சிறந்த முறையில் செயல்பட்டதன் அடிப்படையில் போடி காவல்நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் சார்பில், தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே அவர்கள் பாராட்டு கேடையத்தை போடி நகர் துணை சூப்பிரண்டு அதிகாரி சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, சரவணன் ஆகியோருக்கு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதனையடுத்து காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.