மதுரையில் நடைபெற்ற போட்டியில் சிறந்த வீரர்களுக்கான விருதினை தன் மகன் பெற்றதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் சூரி .
தமிழ் சினிமாவில் சமீபத்தில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் பிஸியாக இருப்பவர் சூரி.தற்போது ரஜினிகாந்த் படத்திலும் ,வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார் .இதையடுத்து கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார் .மதுரையை சொந்த ஊராக கொண்டவர் சூரி .இந்நிலையில் இவருடைய மகன் சஞ்சய் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார் .
மதுரை கிரிக்கெட் அசோஷியன் சார்பில் நடைபெற்ற போட்டியில் அவர் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றுள்ளார் .தன் மகன் சஞ்சய் இருக்கும் புகைப்படத்துடன் இந்த தகவலை சூரி பகிர்ந்துள்ளார் .அதற்கு ரசிகர்கள் பலரும் சூரிக்கு அவருடைய மகனுக்கும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர் .